உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புலி மர்மச்சாவு: வனத்துறை விசாரணை

புலி மர்மச்சாவு: வனத்துறை விசாரணை

வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், மர்மமான முறையில் பெண் புலி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த வில்லோனி எஸ்டேட் வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட பகுதி. இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இங்குள்ள 12ம் நெம்பர் தேயிலை எஸ்டேட்டில் பெண் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா தலைமையிலான வனத்துறையினர், புலியின் உடலை ஆய்வு செய்தனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மிகவும் வயதானதால் தான் பெண் புலி இறந்துள் ளது. 'புலியின் உடலில் எங்கும் காயம் இல்லை. அனைத்து பாகங்களும் அப்படியே உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் இறப்புக்கான காரணம் தெரியவரும். 'வனத்துறை கால்நடை மருத்துவரை கொண்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை