உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வு நுாலகத்தில் மாதிரி தேர்வு துவக்கம்

டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வு நுாலகத்தில் மாதிரி தேர்வு துவக்கம்

வால்பாறை: டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு இன்று (நவ.,17) வால்பாறை நுாலகத்தில் துவங்கியது. வால்பாறை கிளை நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., (குரூப் நான்கு) போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கடந்த மூன்று வாரங்களாக எவ்வித கட்டணமும் இன்றி, மாவட்ட வேலை வாய்ப்பு துறை வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. வால்பாறை கிளை நுாலகத்தில், வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு, மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் திறமையை கண்டறியும் வகையில், வாரம் தோறும் செவ்வாய்கிழமை நாட்களில் மாதிரி தேர்வு நடக்கிறது. இன்று நுாலகர் வேலுச்சாமி முன்னிலையில், மாதிரி தேர்வு நடந்தது. தேர்வில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த, மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !