உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யாருடனும் பகை கொள்ளாமல் வாழ திருக்குறளை படிக்கணும்

யாருடனும் பகை கொள்ளாமல் வாழ திருக்குறளை படிக்கணும்

கோவை,; கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள வைஷ்ணவி காம்ப்ளக்சில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கவிஞர் சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் திருக்குறள் ஆய்வாளர் கணேசன், 'குறளின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் பேசியதாவது: தெய்வ வழிபாடு குறித்து திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று, பலர் கேள்வி கேட்பதுண்டு. கடந்து உள்ளே செல்வது என்ற பொருளில்தான், 'கடவுள்' என்ற சொல் உருவானது. அதனால்தான் திருவள்ளுவர், 'எங்கும் இறைந்து கிடப்பவன் இறைவன்' என்றார். எல்லா அணுக்களிலும் இறைவன் இருக்கிறார். உயிர் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை. உயிர் என்பது மெய்ப்பொருள், இந்த உலகில் தோன்றியவை எல்லாம் அணுக்களின் கூட்டுத் தொகுப்பு. எந்த உயிரும் குறைந்தவை அல்ல, என்பதுதான் திருவள்ளுவரின் வாக்கு. மனிதர்கள் இறந்த பிறகு அவர்களது உறுப்பு தானமாக வழங்கப்படுகிறது. அவர்களின் தொடர்ச்சியாக, அந்த உறுப்பு உலகில் வாழ்கிறது. ஒருவருடன் விளையாட்டாக கூட, பகை கொள்ளக்கூடாது என்பதுதான் திருக்குறள் நமக்கு போதிக்கும் நீதி. அதனால் யாருடனும், பகையில்லாமல் வாழ நாம் திருக்குறளை படிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கவிஞர்கள், பிரசாத், சுந்தரராமன், கோட்டீஸ்வரன், மாரப்பன், வெங்கடேசன், தன்மானம், புதியவன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ