உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உடல் உறுப்பு தானமளிக்க விழிப்புணர்வு வாக்கத்தான் 

உடல் உறுப்பு தானமளிக்க விழிப்புணர்வு வாக்கத்தான் 

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வாக்கத்தான் நடந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், ஒரு லட்சம் பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்வதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆன்லைன் விழிப்புணர்வு 'டிரைவ்' நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில், விழிப்புணர்வு வாக்கத்தான் நடந்தது. மாணவ - மாணவியரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், உடல் உறுப்பு தானம் செய்வோருக்கான, க்யூ.ஆர்.கோடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து நடந்த வாக்கத்தானை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கொடியசைத்து, துவக்கி வைத்தனர். நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், பாரதியார் பல்கலை., என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், https://www.sriramakrishnahospital.com/organ-donation என்ற இணைய 'லிங்க்'ஐ கிளிக் செய்து, பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ