உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று நீட் -பி.ஜி. தேர்வு 

இன்று நீட் -பி.ஜி. தேர்வு 

கோவை: இன்று 18 மையங்களில் நடக்கும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வில், 4,393 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். காலை 9 முதல் மதியம் 12.30 வரை தேர்வு நடக்கிறது. காலை 7 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு குறித்து வெளியாகும் தவறான தகவல்களை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்வு குறித்து ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு 79961 65333 என்ற எண்ணிலும்,  மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள 63841 23073 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை