மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
22-Dec-2024
கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், மாலை 6:30 மணி முதல் இரவு 8:15 வரை திருப்பாவை உபன்யாஸம் நடக்கிறது. கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் சொற்பொழிவாற்றுகிறார். 74வது பூஜா மஹோத்ஸவம்
ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், காலை 5:00 மணி முதல், சூரிய நமஸ்காரம் பாராயணம், ருத்ராபிஷேகம், பஞ்சவாத்தியம், கஜவீரர் மற்றும் திருவாபரணபெட்டியுடன் திருமஞ்சன உலா, புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம், அன்னதானம், மஹா தீபாராதனை, ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா நடக்கின்றன. ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்
ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், காலை 9:15 மணிக்கு, அஷ்டோத்ர சத மஹா மன்யு ஸுக்த ஹோமம், மதியம் 1:00 மணிக்கு, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு திருப்பதி வெங்கடேச பெருமாளின் ஸ்ரீநிவாஸ கல்யாணம் நடக்கின்றன. வாராந்திர சத்சங்கம்
மலுமிச்சம்பட்டி, எப் 4, எப் 5 அம்பாள் நகர் 5வது வீதியில் உள்ள ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை வாராந்திர சத்சங்கம் நடக்கிறது. சுவாமி சங்கரானந்தா அருளுரை வழங்குகிறார். சுகாதார விழிப்புணர்வு
கே.ஜி., மருத்துவமனையில், புற்றுநோய், மாரடைப்புக்கு எதிரான அறப்போர் நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கே.ஜி., மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஜெமினி சர்க்கஸ்
சிங்காநல்லுாரில், திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், ஜெமினி கிராண்ட் சர்க்கஸ், மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணிக்கு காட்சிகள் நடக்கின்றன. குட்டீஸ்கள் கண்டுகளித்து உற்சாகமாக இருக்க சிறந்த தருணம். ஷாப்பிங் திருவிழா
தென் மாநிலத்தின் மாபெரும் நுகர்வோர் கண்காட்சியான கோயம்புத்துார் ஷாப்பிங் திருவிழா, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வருகிறது. காலை 11:00 முதல், இரவு 8:00 மணி வரை நடக்கிறது. 380க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில கேரம் போட்டி
நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில், கல்லுாரியின் உடற்கல்வித்துறை, தமிழ்நாடு கேரம் அசோசியேஷன், கோவை மாவட்ட கேரம் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான கேரம் போட்டி, காலை 9:00 மணி முதல் நடக்கிறது. கதர் பொருட்கள் கண்காட்சி
காதி மற்றும் கிராம தொழில்கள் தயாரிப்பு பொருட்களின் மாநில அளவிலான கண்காட்சி, ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடக்கிறது. மொத்தம் 100 ஸ்டால்கள் இடம்பெற உள்ளன. காதி தயாரிப்பு பொருட்களை வாங்க அருமையான வாய்ப்பு. கைத்தறி கண்காட்சி
கவுண்டம்பாளையம், கல்பனா திருமண மண்டபத்தில், காலை 10:00 முதல், இரவு 9:00 மணி வரை மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நடக்கிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள 113 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. முன்னாள் மாணவர் சந்திப்பு
பீளமேடு பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளியில், முன்னாள் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களின் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி காலை 10:00 மணி முதல் நடக்கிறது. * சூலுார் ஆர்.வி.எஸ்., பள்ளியில், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, முன்னாள் மாணவர் சந்திப்பு நடக்கிறது. கண் பரிசோதனை முகாம்
செட்டிபாளையம் லோட்டஸ் ஆலயம், கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து, லோட்டஸ் ஆலயத்தில், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை கண் பரிசோதனை இலவச முகாம் நடக்கிறது. வாய்ப்பை பயன்படுத்த அழைப்பு விடப்பட்டுள்ளது. திருக்குறள் பயிலரங்கம்
பூ மார்க்கெட் தேவாங்கப் பேட்டை தெரு, சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை 6:30 முதல் 8:00 மணி வரை, உலகப் பொதுமறையாம் திருக்குறளை அடிப்படையாக கொண்டு, திருக்குறள் பார்வையில் கற்றனைத் துாறும் அறிவு' பயிலரங்கம் நடக்கிறது. விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், சுண்டக்காமுத்துார் டி.எஸ்., நர்சரி பள்ளியில், 10:30 முதல் மதியம் 12:00 மணி வரையும், குனியமுத்துார், பாலக்காடு பிரதான சாலை டிவைன் மேரி சர்ச்சில் மாலை 6:30 மணி முதல் 8:30 வரையும் குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. கிராமோத்சவம் நிறைவு விழா
ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா, காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை ஈஷா யோக மையத்தில் நடக்கிறது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
22-Dec-2024