உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

108 திருவிளக்கு பூஜை

தடாகம் சாலை, இடையர்பாளையம் கார்னரில், வி.ஆர்.ஜி., திருமண மஹாலில், ஸ்ரீ சபரீச சேவா சங்கம் சார்பில், ஸ்ரீ தர்ம சாஸ்தா மஹோத்ஸவம் நடக்கிறது. காலை 6:00 மணி முதல் ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், நாமசங்கீர்த்தனம், பஞ்சவாத்தியத்துடன் ஸ்வாமி ஸ்ரீ தர்மசாஸ்தா நகர்வலம், 108 திருவிளக்கு பூஜை நடக்கின்றன.

மார்கழி மாத பூஜை

தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், அகர்வால் பள்ளி சாலையில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவிலில், காலை 6:30க்கு மஹா அபிஷேகம், காலை 7:30க்கு மஹா தீபாராதனை நடக்கிறது.

சிறப்பு சொற்பொழிவு

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும், எப்போ வருவாரோ சொற்பொழிவு' நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கத்தில், மாலை 6:00 மணிக்கு அருளிசையுடன் துவங்குகிறது. காரைக்கால் அம்மையார் குறித்து, மரபின் மைந்தன் முத்தையா ஆன்மிக உரை நிகழ்த்துகிறார்.

விஸ்வரூப தரிசனம்

குனியமுத்துார் நரசிம்மபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், அதிகாலை 4:15 முதல், திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடக்கின்றன.

'கண்ணனும் கந்தனும்'

பி.எஸ்.ஜி., குழும தொண்டு நிறுவனம் சார்பில், 'காதம்பரி' இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பீளமேடு பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்.ஆர்., அரங்கத்தில் மாலை 5:00 மணிக்கு, கண்ணனும் கந்தனும்' என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு, 'கிருஷ்ணா தரங்கம்' என்ற தலைப்பில் சாய் சகோதரிகளின் இசை நிகழ்ச்சியும் நடக்கின்றன.

ஜெமினி சர்க்கஸ்

சிரிக்க வைப்பது, சர்க்கஸ் கலைஞர்களின் மிகப்பெரிய பணி. ஆனாலும் தங்களை பார்க்க வருபவர்களை இவர்கள் ஏமாற்றுவதே இல்லை. சிங்காநல்லுார், திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில் மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணிக்கு, ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நடக்கிறது.

கதர் பொருட்கள் கண்காட்சி

காதி மற்றும் கிராம தொழில்கள் தயாரிப்பு பொருட்களின் மாநில அளவிலான கண்காட்சி, ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடக்கிறது. 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. காதி தயாரிப்பு பொருட்களை வாங்க கிடைத்த வாய்ப்பை தவற விடாதீங்க.

கைத்தறி கண்காட்சி

கவுண்டம்பாளையம், கல்பனா திருமண மண்டபத்தில், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நடக்கிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள, 113 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

குடிநோய் விழிப்புணர்வு

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச்சிலும், கோவைப்புதுார் பாரத் பெட்ரோல் பங்க் அருகில், பேரூர் பிரதான சாலையில் உள்ள ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியிலும், இரவு 7:00 மதல் 8:30 மணி வரை நடக்கிறது.

பள்ளியில் ஆண்டு விழா

கோவை சந்தேகவுண்டன்பாளையத்தில் உள்ள, ஈஷா வித்யா மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில், மாலை 4:30 மணி முதல் ஆண்டு விழா நடக்கிறது. அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, ஆலோசனை மற்றும் திறன் மேம்பாட்டு இயக்குனர் (கொச்சின்) பிந்து விஜயகுமார் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

பட்டமளிப்பு விழா

நேரு கலை, அறிவியல் கல்லுாரியின் 23வது பட்டமளிப்பு விழா, காலை 10:30 மணி முதல், பி.கே.தாஸ் நினைவு அரங்கத்தில் நடக்கிறது. * ஆர்.வி.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் பட்டமளிப்பு விழா, கண்ணம்பாளையம் வளாகத்தில் உள்ள ஆர்.வி.எஸ்., செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில், காலை 10:00 மணி முதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை