மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
03-May-2025
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் சார்பில், 'சுந்தரகாண்டம்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. ராமர் கோவிலில், மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை, பிரம்மஸ்ரீ சுந்தரகுமார் உரையாற்றுகிறார். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தமிழ்நாடு வோளண் பல்கலையில், 1995 முதல் 1999 வரை பி.எஸ்.சி., வேளாண்மை படித்த முன்னாள் மாணவர்கள், இன்று சந்தித்துக்கொள்கின்றனர். வேளாண் பல்கலை வாளகத்தில் காலை, 10:00 மணிக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. விருது வழங்கும் விழா
அரசூர், கே.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் சார்பில், 'கே.பி.ஆர்., லீகசி' விருது வழங்கும் விழா கல்லுாரி அரங்கில், காலை, 11:00 மணி முதல் நடக்கிறது. சிறந்த ஆராய்ச்சியாளர், பேராசிரியர், முன்னாள் மாணவர்கள், பல்துறை சாதனையாளர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு ராமாயண முகாம்
வாழும் கலை சார்பில், ஏழு வயது முதல் 13 வயது குழந்தைகளுக்கான ராமாயண முகாம் நடக்கிறது.ராம்நகர் ரங்காச்சாரி கிளாத் ஸ்டோர் எதிரில், காலை 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, ராமகதை, யோகா, தியானம், விளையாட்டு செயற்பாடுகள் நடக்கின்றன. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
03-May-2025