மேலும் செய்திகள்
மாநகரில் இன்றையசிறப்பு நிகழ்ச்சிகள்
24-May-2025
கோவை மாநகராட்சி 72வது வார்டு மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. ஆர்.எஸ்.புரம், லைட் ஹவுஸ் மைதானத்தில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை, கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகின்றன. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அழகேசன் ரோட்டில் உள்ள, டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்களின் 50ம் ஆண்டு பொன்விழா சந்திப்பு நடக்கிறது. பள்ளி வளாகத்தில், காலை, 9:00 மணி முதல் சந்திப்பு, குழுப்புகைப்படம் எடுத்தல் மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. பகவத்கீதை சொற்பொழிவு
உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை மனமே வலிமையானது என்கிறது. டாடாபாத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. சிறப்புரை
கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், நடிகர் நிழல்கள் ரவியின் சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. தன் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் அவர், பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதில் தருகிறார். நவஇந்தியா, இந்துஸ்தான் கல்லுாரியில், மாலை, 5:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. சமஷ்டி உபநயனம்
ராம்நகர், சத்யமூர்த்தி ரோடு, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், 31வது ஆண்டு பூஜா சங்க சமஷ்டி உபநயனம் நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு மேல் 9:15 மணிக்குள் உபநயனம் நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் சார்பில், 'சுந்தரகாண்டம்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. ராமர் கோவிலில், மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை, பிரம்மஸ்ரீ சுந்தரகுமார் உரையாற்றுகிறார். திருக்கல்யாண விழா
துடியலுார், திருமுருகன் நகரில் உள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில், அரசுக்கும், வேம்பிற்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. காலை, 10:30 முதல் 11:30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ராமாயண முகாம்
வாழும் கலை சார்பில், ஏழு முதல் 13 வயது குழந்தைகளுக்கான ராமாயண முகாம் நடக்கிறது. சிட்ரா, ஏர்போர்ட் ரோடு, ஸ்ரீ பில்டிங்கில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, ராமகதை, யோகா, தியானம், விளையாட்டு செயற்பாடுகள் நடக்கின்றன.
24-May-2025