உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடர் மழையால் பாதித்த தக்காளி பயிர்

தொடர் மழையால் பாதித்த தக்காளி பயிர்

நெகமம்; நெகமம், ஆண்டிபாளையம் அருகே மழையால் சாகுபடி செய்த பயிர் சேதம் அடைந்துள்ளது.கிணத்துக்கடவு மற்றும் நெகமம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பரவலாக உள்ளது. மழை பயன்படுத்தி, விவசாயிகள் பலர் தக்காளி சாகுபடியை துவங்கினர். இதில், ஆண்டிபாளையம் பகுதியில் நடவு செய்த தக்காளி பயிர், தொடர் மழை காரணமாக சேதமடைந்துளாதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.விவசாயி ரவிச்சந்திரன் கூறியதாவது:ஒரு ஏக்கர் நிலத்தில், 3 மாதங்களுக்கு முன் தக்காளி நடவு செய்தோம். 70 நாட்கள் வரை நன்றாக வளர்ந்தது. அதன்பின், அதிக மழை பொழிவால், தக்காளி செடி கருகிய நிலையில் வாடியுள்ளது. தற்போது வரை, 40 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.ஒரு ஏக்கரில், ஆயிரம் பெட்டி வரை தக்காளி பறிப்பு இருக்கும். ஆனால், தற்போது, 200 பெட்டிகள் மட்டுமே வரத்து இருக்கிறது. தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. கடைசியாக (15 கிலோ பெட்டி) 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், ஒரு சில விவசாயிகளுக்கு செலவு செய்த தொகை மட்டுமே கிடைத்துள்ளது. சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !