ஆர்வத்துடன் மலையேறும் சுற்றுலா பயணிகள்
மேட்டுப்பாளையம்; கல்லாறு -- பர்லியார் இடையே இரண்டு மாதங்களுக்கு பிறகு மலையேற்றம் நேற்று முதல் மீண்டும் துவங்கியது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு--பர்லியார் இடையே 3.5 கி.மீ., தூரம் பயணிக்கும் மலையேற்றம் சுமார் இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டு, நேற்று முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் ஆன்லைன் புக்கிங் நேற்று முதல் துவங்கப்பட்ட நிலையில், 3 பேர் புக்கிங் செய்து மலையேற்றம் மேற்கொண்டனர். தொடர்ந்து புக்கிங் செய்யப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மலையேற்றம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.