உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாலாட்டும் பனிமூட்டம் சுற்றுலா பயணியர் ரசிப்பு

தாலாட்டும் பனிமூட்டம் சுற்றுலா பயணியர் ரசிப்பு

வால்பாறை,: வால்பாறையில் மலைமுகடுகளை சூழ்ந்த பனிமூட்டத்தை சுற்றுலாபயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.வால்பாறையில், கடந்த மாதம் மழை பரவலாக பெய்தது. இதனால், பி.ஏ.பி., அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, நீர்வரத்து அதிகரித்ததோடு, அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது.இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக, வால்பாறையில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, இடையிடையே வெயில் நிலவுகிறது. இதனால்,எஸ்டேட் பகுதியில்தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன.சிதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் பரவலாக காணப்படுகிறது. மலை முகடுகளையும், தேயிலை எஸ்டேட்களையும் சூழ்ந்த பனிமூட்டத்தை, சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை