உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்; பயணிகள் அவதி

டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்; பயணிகள் அவதி

அன்னுார்; கஞ்சப்பள்ளி வழியாக இயங்கி வந்த அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால், மாணவ, மாணவியர் தவிக்கின்றனர். அன்னுார் - அவிநாசி சாலையில், கஞ்சப்பள்ளி பிரிவில் துவங்கி, கஞ்சப்பள்ளி, ருத்ரியம் பாளையம், அல்லப்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து அன்னுாருக்கு தினமும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் ஏ.ஆர். 8 மற்றும் ஏ. ஆர். 9 என்னும் அரசு டவுன் பஸ்கள் இயங்கி வந்தன. இதில் ஏ.ஆர். 9, டவுன் பஸ் இந்த வழித்தடத்தில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி வரை சென்று வந்தது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு திம்மநாயக்கன்புதூரில் பாலம் கட்டும் பணி துவங்கியதால் இந்த வழித்தடத்தில் மூன்று மாதமாக இயங்குவதில்லை.இதுகுறித்து கஞ்சப்பள்ளி சமூக ஆர்வலர் பிரபாவதி மற்றும் பொதுமக்கள் கூறுகையில், 'இரண்டு டவுன் பஸ்கள் இயங்கிய போதே, மிக அதிக மாணவ மாணவியர் பயணம் செய்தனர். தற்போது மூன்று மாதங்களாக ஒரே டவுன் பஸ் மட்டுமே காலையில் அன்னுாருக்கு செல்கிறது. இதனால் நூற்றுக்கு மேற்பட்டோர் அந்த பஸ்ஸில் அபாய நிலையில் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து அன்னுார் அரசு போக்குவரத்து கழக கிளையிலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.அபாய பயணத்துக்கு அஞ்சி பலர் 3 கி.மீ., தூரம் நடந்து கஞ்சப்பள்ளி பிரிவு வந்து வேறு பஸ் ஏறி அன்னுார் செல்கின்றனர். அரசு உடனடியாக மீண்டும் ஏ ஆர் 9 டவுன் பஸ்சை இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ