உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுச்சூழல் மசோதாவை ரத்து செய்ய கோரி வரும் 29ல் வேலை நிறுத்த போராட்டம்; தொழிற்சங்கங்கள் கூட்டாக முடிவு

சுற்றுச்சூழல் மசோதாவை ரத்து செய்ய கோரி வரும் 29ல் வேலை நிறுத்த போராட்டம்; தொழிற்சங்கங்கள் கூட்டாக முடிவு

வால்பாறை; 'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா'வை ரத்து செய்ய வலியுறுத்தி, வால்பாறையில், வரும், 29ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.வால்பாறையில் வளமையமான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ வேண்டும். நீர் ஆதாரங்களின் முழுபயனை அடையவும், நீரின்றி வறண்டு கிடக்கும் நிலபரப்பிற்கு, இங்குள்ள நீரினை கொண்டு சென்று பயன்படுத்த வேண்டும். இதனை முன்னிருத்தி, 'சுற்றுச்சூழல்உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்டது.இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்யக்கோரி வால்பாறையில் பல்வேறு சங்கங்கள் சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், மசோதாவை ரத்து செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கோவை ஏ.டி.டி., காலனியில் உள்ள தோட்ட அதிபர் சங்க அலுவலகத்தில் நடந்தது.தோட்ட அதிபர் சங்கத்தின் சார்பில் பாலசந்திரன், ரஞ்சித்கட்டபுரம் (உட்பிரியார்), முரளிபனிக்கர் (பாரிஆக்ரோ), வினோத்திம்மையா (முடீஸ் குரூப்) உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கங்களின் சார்பில் ஏ.டி.பி., தொழிற்சங்க தலைவர் அமீது, வினோத்குமார், சவுந்திரபாண்டின் (எல்.பி.எப்.,), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வரும், 29ம் தேதி 'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை' ரத்து செய்ய கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தேயிலை தொழில் ஏற்கனவே நலிவடைந்துள்ளதால், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடுத்து, பிரச்னையை தமிழக அரசிடம் முறையிடுங்கள், என, தோட்ட அதிபர் சங்க நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்க தலைவர்கள், மசோதாவின் பிடியில் இருந்து வால்பாறையை பாதுகாக்க திட்டமிட்டபடி வரும், 29ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும், என, உறுதியாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை