உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரம்பரிய விதைகள் உணவு கண்காட்சி

பாரம்பரிய விதைகள் உணவு கண்காட்சி

பெ.நா.பாளையம்; மத்தம்பாளையம் சாய் வித்யா நிகேதன்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விதைகள், உணவு கண்காட்சி நடந்தது.இதில், பங்கேற்ற மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானிய விதைகள், காட்சிப்படுத்தியிருந்தனர். விதைகளின் நிறங்களுக்கு ஏற்ப இந்திய வரைபடம், மூவர்ணக் கொடி, தேச தலைவர்கள், பலவகை பறவைகள், மரங்கள், விலங்குகளின் வடிவங்களை விதைகளை கொண்டு உருவாக்கி, கண்காட்சியில் வைத்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.கண்காட்சியில், 8ம் வகுப்பு மாணவி இதயஸ்ரீ, 25 வகையான விதைகளையும்,5ம் வகுப்பு மாணவி யோஜனா நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்களையும் சேகரித்து காட்சிப்படுத்தியிருந்தார். கண்காட்சியில், பாரதியார் பல்கலை முன்னாள் பதிவாளர் செல்வராஜ், பள்ளி நிர்வாக குழுவினர், முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ