உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மையத்தடுப்பு மீது மோதிய அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

மையத்தடுப்பு மீது மோதிய அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மையத்தடுப்பு மீது அரசு பஸ் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ் (டி.என்.39 என், 3225) என்ற பஸ், 80 பயணியரை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி வந்தது. பஸ்சை, பழநியை சேர்ந்த ஆறுமுகம், 56, ஓட்டினார். உடுமலையை சேர்ந்த சுரேஷ், நடத்துனராக இருந்தார். இந்நிலையில், உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் திப்பம்பட்டி அருகே வந்த பஸ், திடீரென மைய தடுப்பில் மோதியது. அதில், மைய தடுப்பு சுவரின் கற்கள், எதிரே பழநி நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடி மீது பட்டு சேதமடைந்தது. இதனால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோமங்கலம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்தில் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், பஸ்சின் டயர் ராடு கட்டனாதால், கட்டுப்பாட்டை இழந்து மைய தடுப்பு மீது மோதியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ