உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் சோகம்: சாலை விபத்தில் 3 பேர் பலி

கோவையில் சோகம்: சாலை விபத்தில் 3 பேர் பலி

கோவை: கோவை ஜி.டி நாயுடு பாலத்தின் கீழ் நடந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை, அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 9ம் தேதி திறந்து வைத்தார்மேம்பாலத்தின் மீது வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஜி.டி.நாயுடு பாலத்தில் இருந்து கோல்டு வின்ஸ் பகுதியில் அதிவேகமாக இறங்கிய கார் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் முழுவதும் லாரியின் பின்பக்கம் அடியில் நுழைந்தது. தீயணைப்பு படையினர், போலீசார் நீண்ட நேரம் மீட்புபணியில் ஈடுபட்டனர். 1 மணி நேர முயற்சிக்கு பின், காரின் சிதைந்த பாகங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டது. காருக்குள் இருந்து மூன்று உடல்கள் நசுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ