உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊரகத் திறனாய்வுத் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி

ஊரகத் திறனாய்வுத் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி

கோவை: அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில், ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். 2026-–27ம் கல்வியாண்டுக்கான தேர்வு நவ., 21ம் தேதி நடக்கிறது. சென்னை தவிர்த்து, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் கிராம ஊராட்சிகள், டவுன்ஷிப்களில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள கிராமப்புற மாணவர்கள் விடுபடாமல் விண்ணப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனத்திறன், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகியவற்றில் கேட்கப்படும் வினாக்களுக்கு மாணவர்களைத் தயார்படுத்த, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !