பணத்தின் முக்கியத்துவம்; மாணவர்களுக்கு பயிற்சி
கோவை; கோவை கவுண்டம்பாளையம் ராமசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, இணைய வழி கற்றல் வகுப்பு நடத்தப்பட்டது. மாணவர்களின் நடைமுறை அறிவையும், கணிதத்தின் அடிப்படை புரிதலையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்த வகுப்பு நடத்தப்பட்டது. குறிப்பாக, 'பண பரிவர்த்தனை' எனப்படும் பணத்தை செலுத்துதல், பெற்றல், மீதம் எடுத்தல், சிறிய கணக்கீடுகள் போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்து, மாணவர்களுக்கு காணொலி காட்சி உதவியுடன் தன்னார்வலர்கள் கற்றுக்கொடுத்தனர். தலைமையாசிரியர் அற்புதமேரி கூறுகையில், ''இந்த வகுப்புகள், அவர்களுக்கான வாழ்க்கைத் திறன்களை வளர்க்க அடித்தளமாக இருக்கும். இதனை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.