உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  போக்சோ புகார்களை கையாள ஆசிரியர்களுக்கு பயிற்சி 

 போக்சோ புகார்களை கையாள ஆசிரியர்களுக்கு பயிற்சி 

கோவை: பாலியல் சீண்டல் குறித்த புகார்கள் அதிகளவில் பதிவாவதால், அதை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. குழந்தைகள் மீதான வன்முறை குறித்த புகார்களை உடனடியாக பதிவு செய்வது, சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துவது, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கவுன்சிலிங் அளிப்பது உள்ளிட்ட பணிகள் சைல்டு லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு, கடந்த ஏப், மே மாதங்களில் மட்டும் 370க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. இதில், குழந்தை திருமணம் சார்ந்தவை மட்டும் 20. இதேபோல போக்சோ புகார்கள் 15 பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளே இப்புகார் எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிப்பதன் மூலம், விழிப்புணர்வு அதிகரித்திருப்பது உறுதியாகிறது. பள்ளி திறந்த நிலையில், போக்சோ புகார்களை, குழந்தைகள் ஆசிரியர்களிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அதை எப்படி கையாள்வது என்பது குறித்து. விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா தெரிவித்தார்.

ஆசிரியர்கள் கவுன்சிலிங் அளிக்கக்கூடாது

ஹப்சா கூறுகையில், ''பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர்களிடம் புகார்கள் தெரிவிப்பதுண்டு. இச்சமயங்களில் ஆசிரியர்களே நேரடியாக இதில் தலையிட்டு கவுன்சிலிங் அளிக்க கூடாது. இது சில நேரத்தில் தவறான முடிவுகளை குழந்தைகள் எடுக்க வாய்ப்புண்டு. இப்புகார்களை உடனடியாக சைல்டு லைன், போலீசாரிடம் தெரிவிப்பதோடு, அத்தகவல்களை ரகசியம் காப்பது அவசியம். அப்போது தான் பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பான சூழலில் இருப்பதாக உணரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி