உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் மகிழ் முற்றம் குழுக்கள் அமைப்பு தலைமைப்பண்பு வளர்க்க பயிற்சி

பள்ளிகளில் மகிழ் முற்றம் குழுக்கள் அமைப்பு தலைமைப்பண்பு வளர்க்க பயிற்சி

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆளுமைத்திறன் மேம்பாட்டுக்காக மகிழ் முற்றம் மாணவர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன.பள்ளி தலைமையாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மாணவர்களிடையே தலைமைப்பண்பை வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில், ஐந்து மாணவர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாணவர் தலைவர், அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.குறிஞ்சி (சிவப்பு வண்ணம்) குழுவின் தலைவராக லத்திகா, முல்லை (மஞ்சள்) குழுவின் தலைவராக தரணிதரன், மருதம் (பச்சை) குழுவின் தலைவராக ஹரிபிரித்திவ், நெய்தல் (நீலம்) தலைவராக பிரவீணா, பாலை (வெள்ளை) குழுவின் தலைவராக வரினீஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பொறுப்பு ஆசிரியர்களாக, குறிஞ்சிக்கு உஷா, முல்லைக்கு மகாலட்சுமி, மருதம் குழுவுக்கு மணிவேல், நெய்தலுக்கு மனுவேல் ராஜன், பாலை குழுவுக்கு தேவி தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவுக்கான மாணவர் தலைவர்கள், பொறுப்பாசிரியர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கிணத்துக்கடவு

மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மகிழ் முற்றம் துவக்க விழா நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் வரவேற்றார். பள்ளி மாணவர் குழு மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளருக்கு தலைமை ஆசிரியர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என மாணவர் குழுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து குழுவுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையிலும், மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர் வருகை, கற்றல் திறன், மன்றங்கள், கலை திருவிழா என ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குழுவுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்படும் குழுவிற்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, முன்னிலை வகிக்கும் குழுவுக்கு பரிசு வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.* சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ஜெயந்தி முன்னிலையில் மகிழ் முற்றம் துவக்க விழா நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர், ஆசிரியர் பயிறுநர்கள், பள்ளி எஸ்.எம்.சி., உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்கள் தலைமை பண்பு வளர்க்கும் வகையில், 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு மாணவர் தலைவராக நியமிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ