மேலும் செய்திகள்
ஆதார் சேவை மையம் செயல்பாட்டுக்கு வருமா?
24-Feb-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகே, கோவில் வளாக அரச மரக்கிளை முறிந்து விழுந்தது.கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் செல்லும் வழியில், ஆதிபட்டி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பெரிய அரச மரம் உள்ளது.நேற்று முன்தினம் தீடீரென இந்த மரத்தின் ஒரு பக்க மரக்கிளை முறிந்து கோவில் மேல் பகுதியில் விழுந்தது. இதனால் கோவில் முன் பகுதி சிமெண்ட் சீட் சிறிதளவு உடைந்து ரோட்டில் விழுந்தது.மேலும், மரக்கிளை ஒரு பகுதி பிரதான ரோட்டில் இருந்ததால், அவ்வழியாக நீண்ட நேரம் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.கோவிலை சுற்றி ஏராளமான குடியிருப்பு மற்றும் கடை உள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்தவிதமான அசம்பாவிதம் நிகழவில்லை.மேலும், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பே, இந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து குடியிருப்பு பகுதியில் விழுந்ததில், வீட்டின் ஓரத்தில் சிறிய அளவிலான சேதம் மற்றும் மின் கம்பிகள் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.மரக்கிளையை அகற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். மேலும், இந்த மரத்தில், கீழே சாயும் நிலையில் உள்ள மற்ற பகுதியையும் அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
24-Feb-2025