உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி

பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி

கோவை: பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு, துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.பணியின் போது உயிரிழந்த, கோவை மாவட்ட போலீசாருக்கு, போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில், நினைவுத்துாண் வைக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் அக்., 22ம் தேதி நினைவு துாண் முன் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்படும்.நேற்று நினைவுத்துாண் முன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், துப்பாக்கி குண்டுகள் முழங்க, போலீஸ் அதிகாரிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி