விஜயகாந்த்துக்கு நினைவு அஞ்சலி
வால்பாறை: தே.மு,தி.க., சார்பில் விஜயகாந்த் நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு கட்சியினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின், இரண்டாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, வால்பாறை புதுமார்க்கெட் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க., நகரச்செயலாளர் பாலாஜிரவீந்தரன் தலைமையில், விஜயகாந்த் படத்திற்கு மலர் துாவி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தே.மு.தி.க., வால்பாறை நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியிலும், தே.மு.தி.க., சார்பில் கட்சியினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.