உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திரா நினைவு தினம் :காங்., சார்பில் அஞ்சலி

இந்திரா நினைவு தினம் :காங்., சார்பில் அஞ்சலி

பொள்ளாச்சி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் பொள்ளாச்சியில் அனுசரிக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட காங். சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின், 41வது நினைவு நாள், பொள்ளாச்சி மாவட்ட காங். அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.மாவட்ட தலைவர் சக்திவேல், இந்திரா திருவுருவபடத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். * வால்பாறை காங்.,கட்சி சார்பில் இந்திரா நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. காங்.,கட்சியின் சிறுபான்மை பிரிவு நகர தலைவர் அப்துல்ரஷீது தலைமையில், முன்னாள் நகர காங்., கமிட்டி தலைவர் குசலவன் இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிறுபான்மைத்துறை சட்டசபை தொகுதி தலைவர் தேவா, மருத்துவ அணி தலைவர் பவுலோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி