த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
போத்தனூர்: கிணத்துக்கடவு தொகுதி த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக தனது தேர்தல் அலுவலகத்திலிருந்து, நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக தாலுகா அலுவலகம் அருகே, மதியம், 12:15 மணியளவில் வந்தார். பின் நான்கு பேருடன் அலுவலகத்தினுள் சென்ற விக்னேஷ், தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் நான்கு பேர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பானுபிரியாவிற்கு, மாற்றாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தார்.