உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படுத்த படுக்கையில் உள்ள முதியோரை பாடாய்படுத்தும் இரு இம்சைகள்

படுத்த படுக்கையில் உள்ள முதியோரை பாடாய்படுத்தும் இரு இம்சைகள்

ஆரோக்கியம் நம்முடன் இருக்கும் வரையில், முதுமை என்பது ஒரு பிரச்னையாக தெரிவதில்லை. உடல் நலக்குறைபாட்டால் படுக்கையில் உள்ளவர்களுக்கு, பெரும் பிரச்னைகளை கொடுப்பது படுக்கை புண் மற்றும் பேன் தொல்லை. இவை இரண்டையும் வரும் முன் தடுத்துக்கொள்வது, மேற்கொண்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க உதவும் என்கிறார், கோவை அரசு மருத்துவமனை தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரேவதி. அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது. n படுக்கை புண் என்பது நீண்ட நாட்கள் படுக்கையில் இருப்பதால், உடலின் ரத்த ஓட்டம் தடைபட்டு ஏற்படுகிறது. படுக்கை புண் வந்துவிட்டால், வலி, வேதனை மட்டுமின்றி பல்வேறு தொற்று பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். n ஒரே இடத்தில் படுக்க வைக்காமல், மாற்றி, மாற்றி படுக்கவைக்க வேண்டும். இதற்கான பிரத்யேக வாட்டர் படுக்கையை பயன்படுத்தலாம். படுக்கையில் இருந்தாலும், சிறு, சிறு உடற்பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்; முடியாத சூழலில், உறவினர்கள் உடல் அசைவுகளை ஏற்படுத்த உதவலாம். n நீண்ட நாட்கள் படுக்கையில் உள்ளவர்களுக்கு, இயல்பாக காணப்படும் பிரச்னைகளில் ஒன்று பேன் தொல்லை. இதனையும் சாதாரணமாக விடுவதால், கொப்பளங்கள் ஏற்பட்டு தொற்று பாதிப்புகள் உண்டாக்கிவிடும். n இவ்விரண்டு பிரச்னைகளுக்கும் தனி சோப்பு, துண்டு, போர்வை, தலையணை பயன்படுத்த வேண்டும். தலையனை உறை, போர்வையை அடிக்கடி துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். n உடல் முடியாதவர்களாக இருந்தாலும், தலைக்கு வாரம் இரண்டு அல்லது ஒரு முறை தேய்த்து குளிப்பாட்டி விட வேண்டியது அவசியம். தலையை தினந்தோறும் வாரி கட்ட வேண்டும்; அப்படியே விட்டுவிடக்கூடாது. பேன் வந்துவிட்டால், 'பெர்மத்ரின்' எனும் ஷாம்பூ தேய்த்து குளித்தால் அனைத்தும் வந்துவிடும். இரண்டு, மூன்று பேன் இருந்தாலே அதை சுத்தம் செய்து அகற்றிவிடவேண்டும். ஈறு பெரிதாகும் முன் எடுத்துவிட வேண்டும். n சுத்தம், சுகாதாரமாக இருந்தால் இந்த இரண்டு பிரச்னைகளையும் வராமல் தடுக்கமுடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி