போதை வஸ்துகள் விற்ற இருவர் கைது
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில், தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை கண்டறிந்து தடுக்க போலீசார், அவ்வபோது கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.பள்ளி மற்றும் 'டாஸ்மாக்' பார் அருகேயுள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்தினர். இருவேறு கடைகளில், மொத்தம், 31 பாக்கெட் போதை வஸ்துகள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. மேட்டுப்பாளையம் பிரிவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, 51, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதாப், 31 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.