கஞ்சா விற்ற இருவர் குண்டாசில் கைது
கோவை; கோவை, கவுண்டம்பாளையம், காமராஜ் நகரை சேர்ந்த தேன்மொழி,46, சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த திலீபன்,35, ஆகியோர், கஞ்சா விற்ற வழக்கில், கடந்த 27ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவருக்கும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப் பட்டது.