செல்போன் பறித்த இருவர் கைது
மேட்டுப்பாளையம்; சி றுமுகை அருகே சைக்கிளில் சென்ற முதியவரிடம் செல்போனை பறித்த, இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை சேர்ந்தவர் சுப்பிரமணி, 77. இவர் சிறுமுகை அருகே தென் திருப்பதி நால் ரோட்டில், சைக்கிளில் சென்றபோது சென்னம்பள்ளி பிரிவு அருகே வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், இவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக சுப்பிரமணி சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். விசாரணையில், மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த சூரியா, 23, தன்னாட்சியப்பன், 25, என தெரியவிந்தது. போலீசார் இருவரையு ம் கைது செய்தனர்.---