உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொலை வழக்கில் இருவருக்கு சிறை

கொலை வழக்கில் இருவருக்கு சிறை

சோமனுார்: சோமனுார் அருகே தொழிலாளியை கொன்ற வழக்கில், இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரம்பலுார் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த தேவதாஸ், 35, சோமனுார் அடுத்த காரணம் பேட்டையில் தங்கி பணிபுரிந்து வந்தார். ராமாச்சியம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது, ராமாச்சியம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித், 24, சோமனுார் செல்வபுரம் காலனியை சேர்ந்த அசோக், 20 என்பவரும் மது வாங்க வந்துள்ளனர். ரஞ்சித்துக்கும், தேவதாசுக்கும் ஏற்கனவே பகை இருந்துள்ளது. தேவதாசை கண்டதும் ஆத்திரமடைந்த இருவரும், கத்தியால் குத்தி கொலை செய்து தப்பினர். இருவரையும் கைது செய்த கருமத்தம்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி