உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலி லேப் நடத்தி கொரோனா டெஸ்ட்; டெக்னீசியன் உட்பட இருவருக்கு சிறை

போலி லேப் நடத்தி கொரோனா டெஸ்ட்; டெக்னீசியன் உட்பட இருவருக்கு சிறை

கோவை; வேலை பார்த்த நிறுவனத்தின் பெயரில் போலியான ஆய்வகம் நடத்தி, கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் கொடுத்து வந்த இருவருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, பீளமேட்டில் 'பெத்தாஜெனிக்ஸ்' என்ற ஆய்வகம் செயல்படுகிறது. வடவள்ளி, தில்லை நகரை சேர்ந்த கவுசிகன்,36,என்பவர் லேப் டெக்னீசியனாக பணியாற்றினார். கொரோனா தொற்று பரவிய காலத்தில், இந்த ஆய்வகத்தில் 'டெஸ்ட்' எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அதே லேப் பெயரை பயன்படுத்தி, அதே பகுதியில் தனியாக போலி லேப் நடத்தி வந்துள்ளார். போலியாக லெட்டர் பேடு, சீல் தயாரித்து, கொரோனா 'டெஸ்ட்' எடுத்து மருத்துவமனைகளுக்கு அறிக்கை அனுப்பி கட்டணம் வசூலித்து வந்துள்ளார். ஒரிஜினல் லேப் ஓனர் ராஜசேகர், 2021, ஜூன், 24ல் போலீசில் புகார் அளித்தார். கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, கவுசிகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வீரகேரளம் உமாதேவி, 30, ஆகியோர் மீது, கோவை ஜே.எம். 4, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட் அருண்குமார், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும், தலா 3 ஆண்டு சிறை, 18,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ