உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி கடத்திய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

ரேஷன் அரிசி கடத்திய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், கோவை, சுண்டாக்கமுத்துார் - பேரூர் ரோடு காஸ் குடோன் அருகே வாகன தணிக்கை செய்த போது, இருசக்கர வாகனம் மற்றும் ஆம்னி வேன்களில், 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதை கண்டுபிடித்தனர்.வடமாநில தொழிலாளர்களுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்த, கோவை செல்வபுரம் மில்டன் ராஜா,38 என்பவரை கைது செய்தனர். மேலும், கடந்த மாதம், 22ம் தேதி கோவை - சேலம் - கொச்சின் பைபாஸ் ரோடு பிச்சனுார் தனியார் கல்லுாரி அருகே வாகன தணிக்கை செய்த போது, ஆம்னி வேனில், 600 கிலோ ரேஷன் அரசியும், வீட்டின் அருகே பதுக்கி வைத்து இருந்த, 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சிவமுருகேசன் என்பவரை கைது செய்தனர்.இருவர் மீதும் கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், கோவை கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரை செய்தார்.அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை கலெக்டர் உத்தரவிட்டார். ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள இருவரிடம், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை