உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு பழங்குடியின மாணவர்கள் பள்ளி விடுதியில் இருந்து மாயம்

இரு பழங்குடியின மாணவர்கள் பள்ளி விடுதியில் இருந்து மாயம்

வால்பாறை; கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில், 150 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.இப்பள்ளியில் சேத்துமடை நாகரூத்து செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15வயது எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவர்கள் நேற்று முன்தினம் காலை யாரிடமும் சொல்லாமல், பள்ளியின் பின்பக்கம் வழியாக வெளியேறியுள்ளனர்.மாயமான மாணவர்கள், பெற்றோரை சந்திக்க வீட்டிற்கும் செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர்களின் பெற்றோர், வால்பாறை போலீசில் நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு புகார் அளித்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, மாயமான மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் நேற்றும் பல்வேறு இடங்களில் தனித்தனி குழுவாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !