உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடையாளம் தெரியாத இளைஞர் உடல் மீட்பு

அடையாளம் தெரியாத இளைஞர் உடல் மீட்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் அருகே உள்ள சிவம் தியேட்டரின் எதிரே ஒரு பழைய கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனிடையே இக்கட்டடத்தின் உள்ளே இருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து, அருகில் இருக்கும் கடைக்காரர்கள், மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார், உள்ளே சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவாறு இளைஞரின் உடல் இருந்தது. உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ