காய்கறி, பழப்பொருட்கள் தயாரிக்க பல்கலையில் பயிற்சி
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பற்றிய பயிற்சி, இரண்டு நாட்கள் நடக்கிறது.நாளை மற்றும் வரும் 23ம் தேதி காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும். உலர வைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம் (ஸ்குவாஷ்), தயார் நிலை பானம் (ரெடி டூ சர்வ் பெவரேஜ்), ஊறுகாய், ஊறுகனி (கேண்டி), பழப்பார் (புரூட் பார்), பழ மிட்டாய் ஆகியவை தயாரிக்க, பயிற்சி அளிக்கப்படும். விவரங்களுக்கு 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.