உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு

அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு

பெ.நா.பாளையம்,: அங்கக வேளாண்மையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில், உயிர் உரங்களின் பயன்பாடு முக்கியமானது என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான உயிர் உரங்களின் விலை குறைவானவை. அதே சமயம் மண்ணில் ஊட்டச்சத்துகளின் சுழற்சிக்கு பெரும் ஆதாரமாக விளங்குகிறது. பொதுவாக, வளிமண்டல தழைச்சத்தை கிரகித்து, மண்ணில் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள், மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள மணி மற்றும் சாம்பல் சத்துக்களை கரைத்து பயிருக்கு அளிக்கும் பாக்டீரியாக்கள், பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகள் என உயிர் உரங்கள் பல வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றை விதை நேர்த்தியாகவும், அல்லது நடவு வயலில் மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடுவதன் வாயிலாகவும் பெறலாம்.பொதுவாக பண்ணை கழிவுகள் அளவில் அதிகமாகவும், குறைந்த சத்துக்களை கொண்டிருக்கும். ஆகையால் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் பண்ணை கழிவுகளை கிளரிரீசிடியா, அகத்தி போன்ற பசுந்தாழ் இலைகள், மாட்டு சாணம் மற்றும் கோமியம், நுண்ணுயிர் கலவைகள் ஆகியவற்றை பயன்படுத்தி மக்கச் செய்து பிறகு செறிவூட்டிப் பயன்படுத்தலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி