உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மஞ்சப்பை உபயோகியுங்கள் எஸ்.எஸ்.குளத்தில் பிரசாரம்

மஞ்சப்பை உபயோகியுங்கள் எஸ்.எஸ்.குளத்தில் பிரசாரம்

கோவில்பாளையம்: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை வடக்கு கோட்டம் மற்றும் சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி சார்பில், மஞ்சப்பை உபயோகத்தை அதிகப்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.பேரணியை, பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், துணைத் தலைவர் மணி ஆகியோர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், போலீசார், குமரன் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். ராமன் குட்டை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ