மேலும் செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
04-Jun-2025
அன்னுார்; மத்திரெட்டிபாளையம், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.மத்திரெட்டிபாளையத்தில் பழமையான ஏண்டம்மா, வரதராஜ பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2001 மற்றும் 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மீண்டும் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன.கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. புண்ணிய நதிகளின் தீர்த்தம், கலசங்கள், முளைப்பாலிகை ஆகியவை வாணவேடிக்கையோடு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் எண் வகை மருந்து சாத்துதலும், மாலையில் சீர்வரிசை கொண்டு வருதலும் நடந்தது.நேற்று காலை 7:50 மணிக்கு மூலவர், பரிவார தெய்வங்கள் மற்றும் விமான கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
04-Jun-2025