உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பிரபஞ்ச ஆசிரமத்திற்கு காய்கறி விநியோகம்

 பிரபஞ்ச ஆசிரமத்திற்கு காய்கறி விநியோகம்

அன்னூர்: அன்னூர் அருகே நல்ல கவுண்டம்பாளையத்தில், பிரபஞ்ச அமைதி ஆசிரமம் செயல்படுகிறது. இங்கு மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், முதியோர் என 400க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். குன்னத்தூராம்பாளையத்தில் உள்ள அட்சயா சேவா சங்கம் சார்பில், ஒவ்வொரு மாதமும் ஆசிரமத்திற்கு, 200 கிலோ காய்கறி வழங்கப்படுகிறது. 2009ம் ஆண்டு முதல் இப்பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அட்சயா சேவா சங்க நிர்வாகிகள், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், 200 கிலோ காய்கறியை இலவசமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ