மேலும் செய்திகள்
மரைன் போலீசார் வாகன சோதனை
23-Jun-2025
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில், போதைப் பொருள் பயன்பாடு ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மேட்டுப்பாளையம் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்றுலா தலமான நீலகிரிக்கு செல்கின்றன. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவைகளை கண்காணிக்க கல்லாறு பகுதியில் நீலகிரி போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.இதுகுறித்து நீலகிரி போலீசார் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்திற்குள் போதைப் பொருள்களை கடத்தி சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் கல்லாறு இ-பாஸ் சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்,'' என்றனர்.
23-Jun-2025
24-Jun-2025