மருதமலையில் 9ம் தேதி வாகனங்களுக்கு தடை
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகமான வரும் 9ம் தேதி, மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல, கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும் 9ம் தேதி, வைகாசி விசாகத்தினை முன்னிட்டு மலை கோவிலுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் மலைபடிகள் வழியாகவும், திருக்கோவிலின் பஸ் மற்றும் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்களில் சென்றும், சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.