பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம்; பொதுமக்கள் பாதிப்பு
ரோட்டோரத்தில் வாகனங்கள் வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டின் ஓரம், அடிக்கடி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும். - - நவீன்: வாகன ஓட்டுநர்கள் அவதி பொள்ளாச்சி, நகராட்சி அலுவலகம் அருகே ரோட்டில், தொடர் குறுக்கு பட்டை அமைக்கப்பட்டிருப்பதால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த குறுக்குப்பட்டையை அகற்றம் செய்ய வேண்டும். -- ரஞ்சித்: சுகாதாரம் பாதிப்பு பொள்ளாச்சி ரத்தின விநாயகர் கோவில் வீதி சந்திபு ரோட்டோரம் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள குப்பையை அகற்றம் செய்ய வேண்டும். இத்துடன் இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். -- பெருமாள்: ரோட்டோர குப்பை கிணத்துக்கடவு கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், லட்சுமி நகர் பகுதியில் ரோட்டோரம் அதிக அளவு குப்பை ஏகமாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் விரைவில் அகற்றம் செய்ய வேண்டும். -- டேவிட்: ரோடு சேதம் கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டு முன்பு உள்ள சர்வீஸ் ரோட்டில், பள்ளம் போன்ற குழி ஏற்பட்டுள்ளதால், பஸ் ஸ்டாண்டு உள் பகுதியில் செல்லும் பஸ்சுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையோ அல்லது பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பிலோ இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும். -- கார்த்தி: நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தம் உடுமலை பழநி ரோட்டில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வாகனங்கள் நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சண்முகம்: கால்வாயை மூடணும் உடுமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கழிவு நீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை மூட நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவக்குமார்: பராமரிப்பு இல்லை உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் உள்ள நிழற்கூரை பராமரிப்பு இல்லாமல், குப்பையாக காணப்படுகிறது. எனவே மக்கள் இதை பயன்படுத்த தயங்குகின்றனர். எனவே, இந்த நிழற்கூரையை நகராட்சியினர் பராமரிக்க வேண்டும். - சங்கர்: ரவுண்டானா வேண்டும் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் நால்ரோட்டில் அதிகளவு போக்குவரத்து காணப்படுகிறது. இங்கு நான்கு ரோடுகள் சந்திப்பதால், வாகனங்கள் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கருப்பசாமி: சேதமடைந்த ரோடு உடுமலை பழநி ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் முதல் காந்திநகர் வரை ஆங்காங்கே ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. எனவே, சேதமடைந்த பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். - சாமிநாதன்: மின்கம்பத்தில் விளக்குகள் இல்லை உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி வெற்றிவேல் நகரில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால், அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கம்பத்தில் விளக்குகள் பொருத்த ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணன்: