உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளலூர் குப்பை அடுத்த வாரம் அகற்றம்

வெள்ளலூர் குப்பை அடுத்த வாரம் அகற்றம்

கோவை, செப். 7 – வெள்ளலூர் சாலைகளில் குப்பை தேங்குவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். வீடுகளின் அருகில் குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வெள்ளலூரில் 50,000 பேர் வசிக்கின்றனர். தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் வீடுவீடாக குப்பை சேகரிப்பதிலும், தரம் பிரிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் குப்பையை வீசுகின்றனர். பேரூராட்சி சேகரிக்கு தரம் பிரிக்காத குப்பையை மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட அனுமதி மறுத்துள்ளதால், குப்பை மூட்டைகள் ஆங்காங்கே தேக்கி வைக்கும் நிலை உள்ளது. இது குறித்து வெள்ளலூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டபோது, ”35 புதிய தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குப்பைகளை தரம் பிரிக்க இடம் கேட்டோம்; மாநகராட்சி 2 ஏக்கர் இடம் ஒதுக்கியுள்ளது. அடுத்த வாரத்துக்குள் பொதுஇடங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ