உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வெள்ளலுார் மக்கள் கோரிக்கை

 வெள்ளலுார் மக்கள் கோரிக்கை

கோவை: குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் அறிக்கை: வெள்ளலுார் குப்பை கிடங்கில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. பலவித துர்நாற்றம் காரணமாக, பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டால், 'செம்மொழி பூங்கா பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம்; பின்னர் அழைக்கிறோம்' என்கிற ஒரே பதில் மட்டும் கிடைக்கிறது. செட்டிபாளையம் சாலையின் நடுவில் உள்ள, தெருவிளக்கு ஒரு மாதமாக எரிவதில்லை. இதற்கும் புகார் கொடுத்தபோது, 'செம்மொழி பூங்கா வேலை முடிந்த பின் பார்க்கலாம்' என கூறி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செம்மொழி பூங்கா முக்கிய மான பணியே. அதே சமயம் பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளிலும், மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவது அவசியம். எங்கள் பகுதியை 'வாழத்தகுதியில்லாத இடம்' என, மாநகராட்சி அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை