துணைவேந்தர் (பொ) பொறுப்பேற்பு
கோவை: கோவை வேளாண் பல்கலையின் பொறுப்பு துணை வேந்தராக, பதிவாளர் தமிழ்வேந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.வேளாண் பல்கலையின் துணைவேந்தரான கீதா லட்சுமியின் பதவிக்காலம் கடந்த 28ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, விதிமுறைப்படி, பல்கலையின் பதிவாளரை பொறுப்பு துணைவேந்தராக நியமித்து, கவர்னரின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டார். கடந்த 28ம் தேதி மாலை துணைவேந்தர் பதவி காலியானதும், முறைப்படி, பதிவாளர் தமிழ்வேந்தன் பொறுப்பு துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார்.