தினமலர் சார்பில் வித்யாரம்பம் கோவையில் நாளை நடக்கிறது
கோவை : 'தினமலர்' நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து, கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நாளை (அக்., 12) காலை, 7:35 முதல் காலை, 10:00 மணி வரை, 'அ'ன்னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் என்ற பெயரில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்பும் பெற்றோர் தங்களது இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளை அழைத்து வரலாம். அனுமதி இலவசம்
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பெற்றோர், தங்களது குழந்தை பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் போன் எண் ஆகிய வற்றை, 81226 91223 என்ற எண்ணுக்கு முன்பதிவு செய்ய வேண்டும். பங்கேற்கும் குழந்தைகளுக்கு சிலேட், பென்சில், ரப்பர், பேக் உள்ளிட்ட கல்வி பொருட்கள் வழங்கப்படுகின்றன. முன்பதிவு செய்ய மறந்து விட் டாலும் பரவாயில்லை;நிகழ்ச்சி நடைபெறும் ராம் நகர் ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்துக்கு நாளை (அக்., 12) காலை, 7:30 மணிக்கு நேரில் வந்து, பதிவு செய்து பங்கேற்கலாம். அனுமதி இலவசம். தங்களது செல்லக்குழந்தையின் கல்வியை துவக்குவதற்கு வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு மறக்காமல் அழைத்து வாருங்கள்.