உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருத்து கேட்புக் கூட்டத்தில்கிராம சபை தீர்மானம் ஒப்படைப்பு

கருத்து கேட்புக் கூட்டத்தில்கிராம சபை தீர்மானம் ஒப்படைப்பு

அன்னுார்,;கோவை-சத்தி புறவழிச் சாலை 1,912 கோடி ரூபாயில் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி நிறைவேற்றிய கிராம சபை கூட்ட தீர்மானங்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி, ஏற்கனவே உள்ள கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக 2 1/2 கி.மீ., தொலைவில் புதிய பசுமை நான்கு வழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடக எல்லை வரை 96 கி.மீ.,க்கு அமைய உள்ளது. இதற்காக 736 ஏக்கர் நிலம், கையகப்படுத்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.இதற்கு ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் விசாரிப்பதற்கான கூட்டம் நான்காவது கட்டமாக அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அபிராமி ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் கருத்து கேட்டு எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தார்.கரியாம்பாளையம், குப்பேபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் அதிகாரிகளிடம் கூறுகையில், 'இந்த புதிய சாலையால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள், தொழிற்சாலைகள் பாதிக்கப்படும். விவசாய நிலங்களை அழித்து நெடுஞ்சாலை அமைப்பது தேவையற்றது. எங்களுடைய ஒரு அடி நிலத்தை கூட கையகப்படுத்த விடமாட்டோம். புதிய பசுமை வழிச் சாலை தேவையில்லை. ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம் என கடந்த மே 1ம் தேதி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த நகலையும் இத்துடன் ஒப்படைக்கிறோம்,' என்றனர்.மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அபிராமி பதிலளிக்கையில், உங்களது கருத்துக்கள் அரசுக்கு தெரிவிக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை