உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போர்வெல் நீர் விற்பனை; கிராம மக்கள் புகார்

போர்வெல் நீர் விற்பனை; கிராம மக்கள் புகார்

அன்னுார்; அனுமதி இன்றி நிலத்தடி தண்ணீர் எடுத்து விற்பதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. குப்பேபாளையம் ஊராட்சி மக்கள் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது : குப்பே பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பா கவுண்டன்புதூர் நால்ரோடு முதல் காரமடை செல்லும் தார் ரோடு வரை போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி சிலர் நிலத்தடி நீரை எடுத்து வாகனங்களில் நிரப்பி விற்பனை செய்து வருகின்றனர். இந்த வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்பட்டு அச்சுறுத்துகின்றன. மேலும் மிக அதிக சக்தி உள்ள மின் மோட்டார் பயன்படுத்தி நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்வதால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இதுவரை நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை