ராம்நகர் ராமர் கோவிலில் வில்லிபாரத சொற்பொழிவு
கோவை; ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில், காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ கல்யாணராமனின் வில்லிபாரத சொற்பொழிவு, வரும் 12 முதல் 22 வரை நடக்கிறது.இது குறித்து, கோதண்டராமர் கோவில் தேவஸ்தானம் அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் 12ல் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையும், 13ல் திரவுபதி மானம் காத்தல், 14ல் நளசரித்திரம், 15ல் அர்ச்சுனன் தவம், 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் நச்சுப்பொய்கை, 18ல் சகாதேவனும் கண்ணனும், 19ல் குந்தியும், கர்ணனும், 20ல் கீதையில் கண்ணன், 22ல் கர்ணன் மோட்சமும், தர்மர் பட்டாபிஷேகம் குறித்த, சொற்பொழிவு நடக்கிறது. அன்றாடம் மாலை 6:30 மணிக்கு துவங்கி, இரவு 8:30 மணி வரை நடைபெறும். 15ம் தேதி ஞாயிறன்று மட்டும் காலை 10:00 மணிக்கு துவங்கி, 12:00 மணி வரை சொற்பொழிவு நடைபெறும்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராம்நகர் திருப்பாவை, திருவெம்பாவை கமிட்டி செய்து வருகிறது.